sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண காங்., போராட்டம் அறிவிப்பு

/

 குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண காங்., போராட்டம் அறிவிப்பு

 குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண காங்., போராட்டம் அறிவிப்பு

 குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண காங்., போராட்டம் அறிவிப்பு


ADDED : பிப் 28, 2026 05:06 AM

Google News

ADDED : பிப் 28, 2026 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை உடனடியாக தீர்க்க அரசு முன்வர வேண்டும் என காங்., சீனியர் துணை தலைவர் தேவதாஸ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

காமராஜர் நகர் பகுதியில் பல ஆண்டுகளாக விநியோகம் செய்யப்படும் குடிநீர் மிகவும் அசுத்தமாகவும், சில நேரங்களில் புழுக்கள் கலந்தும் வருகின்றன. தற்போது, நிலைமை மிகவும் மோசமடைந்து, துர்நாற்றம் வீச துவங்கியுள்ளது. இதனால், குடிநீரை பொதுமக்கள் குடிக்கவோ, உணவு சமைக்கவும், குளிக்கவும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு பணம் கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தினசரி குடிநீர் வாங்குவது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய சுமையாக மாறியுள்ளது. இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இல்லையெனில் மாநில காங்., சார்பில், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us