தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தவறாகி போனதா வேட்பாளர் தேர்வு காங்., – தி.மு.க., கட்சிகள் அதிர்ச்சி

தவறாகி போனதா வேட்பாளர் தேர்வு காங்., – தி.மு.க., கட்சிகள் அதிர்ச்சி

தவறாகி போனதா வேட்பாளர் தேர்வு காங்., – தி.மு.க., கட்சிகள் அதிர்ச்சி


UPDATED : அக் 09, 2026 08:09 PM

ADDED : அக் 09, 2026 08:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 08:09 PM ADDED : அக் 09, 2026 08:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் காங்., – தி.மு.க., வேட்பாளர்கள் தேர்வு தவறாகி போனதால், இரண்டு கட்சியினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த் 8,482 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அவர், மொத்தம் 13,358, ஓட்டுகள் பெற்றார். கடந்த தேர்தலில் முதல்வர் ரங்கசாமி வாங்கிய 10,024, ஓட்டுகளை விட 3,334 ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த தேர்தலில் த.வெ.க., கூட்டணியில் போட்டியிட்ட நேயம் மக்கள் கழக வேட்பாளர் விநாயகம் 5,583 ஓட்டுகள் வாங்கி இரண்டாம் இடம் பிடித்தார். தற்போது காங்., சார்பில் போட்டியிட்ட அவர், 707 ஓட்டுகள் குறைந்து, 4,876 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.

இதேபோல் கடந்த முறை சுயேச்சையாக போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்த சேது செல்வம் 3,984 ஓட்டுகள் வாங்கினார். தற்போது தி.மு.க., சார்பில் போட்டியிட்ட அவர், 1,320 ஓட்டுகள் குறைந்து 2,664 ஓட்டுகள் வாங்கி டிபாசிட்டை இழந்தார்.

கடந்த தேர்தலில் விநாயகம், சேது செல்வம் வாங்கிய ஓட்டுகளை கணக்கிட்ட புதுச்சேரி காங்., மற்றும் தி.மு.க., தலைமை, இடைத்தேர்தலில் தங்கள் கட்சி சார்பில், இவர்களை நிறுத்தினால் என்.ஆர்.காங்., வேட்பாளரை சுலபமாக வீழ்த்தலாம் என, நினைத்து தங்கள் கட்சியை சேராத இந்த இருவருக்கும் சீட்டை வழங்கி இரண்டு கட்சிகளுமே தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

இதில், காங், வேட்பாளர் விநாயகத்திற்கு கூட்டணியில் இருந்த த.வெ.க., பெரியளவில் பிரசாரங்களை செய்யாமல் அடக்கியே வாசித்தது. வேட்பாளர் சேது செல்வத்திற்கு தி.மு.க., தமிழக நிர்வாகிகளே வீடு, வீடாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் இந்த இருவருமே கடந்த முறையை விட தற்போது மிக குறைந்த ஓட்டுகளை பெற்று தோல்வியை தழுவியுள்ளனர். வேட்பாளர் தேர்வில், இவர்களை தேர்வு செய்தது தவறாகி போனது இரண்டு கட்சிகளையும் கலங்கடித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us