தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் மகாத்மா நகரில் ஓட்டு சேகரிப்பு

காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் மகாத்மா நகரில் ஓட்டு சேகரிப்பு

காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் மகாத்மா நகரில் ஓட்டு சேகரிப்பு


ADDED : ஏப் 01, 2026 07:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 07:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி மகாத்மா நகரில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம், தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் கூட்டணி கட்சியினருடன் ஓட்டு சேகரித்தார்.

தட்டாஞ்சாவடி தொகுதியில் இண்டி கூட்டணி சார்பில், போட்டியிடும் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் நேற்று இ.சி.ஆரில் உள்ள லதா ஸ்டீல் அவுஸ் பின்புறமுள்ள மகாத்மா நகர், மேட்டு நகர், எல்லையம்மன் நகர், லட்சுமி நகர்களில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.

அப்போது, தி.மு.க., மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் நித்திஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பிரசாரத்தில் நித்திஷ் கூறுகையில், 'கட்சி தலைமை அறிவுறுத்தலின்படி இண்டி கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற சிறப்பாக பணியாற்றி வருகிறோம். எங்கள் பிரசாரம் வரும் நாட்களில் மேலும் தீவிரப்படுத்தப்படும். காங்., பிரசாரத்தில், தி.மு.க.,வும் இணைந்திருப்பதன் மூலம் தட்டாஞ்சாவடி தொகுதியில் இண்டி கூட்டணி வேட்பாளர் வெற்றி உறுதியாகியுள்ளது. நான் ஏற்கனவே தொகுதி முழுதும் மக்களை சந்தித்துள்ளேன். அப்போது பெரும்பாலான மக்கள் ஆளும் அரசின் மீதான அதிருப்தியை என்னிடம் தெரிவித்தனர். எனவே இத்தேர்தலில் இண்டி கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us