/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., ஆலோசனைக் கூட்டம் நிர்வாகிகள் மோதலால் பரபரப்பு
/
காங்., ஆலோசனைக் கூட்டம் நிர்வாகிகள் மோதலால் பரபரப்பு
காங்., ஆலோசனைக் கூட்டம் நிர்வாகிகள் மோதலால் பரபரப்பு
காங்., ஆலோசனைக் கூட்டம் நிர்வாகிகள் மோதலால் பரபரப்பு
ADDED : ஆக 19, 2025 07:58 AM

புதுச்சேரி : புதுச்சேரி மாநில காங்., தலைமை அலுவலகத்தில் வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, மாநில தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு, புதுச்சேரி காங்., கமிட்டி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், முன்னாள் முதல்வர் நாராயணசாமி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, பெத்தபெருமாள், சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், இளைஞரணி மாநில தலைவர் ஆனந்தபாபு, வழக்கறிஞர் அணி தலைவர் மருதுபாண்டியன், முன்னாள் கவுன்சிலர் குமரன், மாநில பொதுச் செயலாளர்கள் தனுசு, இளையராஜா உள்ளிட்ட மாநில, மாவட்ட, மகளிர் அணி, இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், வரும் சட்டசபை தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளிடம் கருத்து கேட்டார். அப்போது, மாநில பொதுச் செயலாளர் இளையராஜா, கடந்த சட்டசபை தேர்தலின் போது, பல முன்னணி தலைவர்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களாக பதவிகள் வழங்கப்பட்டன. ஆனால், அவர்களின் செயல்பாடுகளால் தேர்தலில் எந்தவித மாற்றம் ஏற்படுத்தவில்லை. மாறாக, காங்., கட்சி ஆட்சியை இழந்ததுடன், எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது.
ஆகையால், வரும் சட்டசபை தேர்தலில், புதியவர்களுக்கு பொறுப்புகள் வழங்கி தேர்தல் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார். அப்போது, இளையராஜா பேசியதற்கு, முன்னாள் அமைச்சர் கந்தசாமி எதிர்ப்பு தெரிவித்து பேசியதால், கூட்டத்தில் சற்றுநேரம் சலசலப்பு நிலவியது.தொடர்ந்து, பல்வேறு அணி நிர்வாகிகளுடன் தனித்தனியாக கருந்து கேட்பு நடந்தது.