UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:14 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: இந்திய தேர்தல் ஆணையர் பதவி விலக கோரி காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் எஸ்.ஐ.ஆர்.,பணியில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அவர் பதவி விலக கோரி, புதுச்சேரி காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மிஷன் வீதி சம்பா கோவில் அருகில் நேற்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன், அனந்தராமன் உட்பட மாநில, மாவட்ட தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
