நேரு எம்.எல்.ஏ., போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் வையாபுரி மணிகண்டன் கருத்து
நேரு எம்.எல்.ஏ., போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் வையாபுரி மணிகண்டன் கருத்து
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:14 PM
வையாபுரி படம் வைக்கவும்
புதுச்சேரி: நேரு எம்.எல்.ஏ., தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என வையாபுரி மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நேரு எம்.எல்.ஏ., சுய விளம்பரத்திற்காகவும், தேர்தல் லாபத்திற்காகவும், எம்.எல்.ஏ., என்ற மாண்பை மீறி சட்டத்தை மீறி, மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு, முதல்வர் மற்றும் மல்லாடி கிருஷ்ணாராவை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். ரவுடி கூட்டத்தை அழைத்துக் கொண்டு தகராறு செய்வதற்காக சென்றார். அப்போது தற்காலிக சபாநாயகர் அழைத்த போது மரியாதை குறைவாக நடத்தியுள்ளார். நேரு அவர்கள் எம்.எல்.ஏ.,வாக ஆகும்போது சட்டசபையின் மாண்பு குறைகிறது.
உங்கள் தொகுதியில் நடந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. ரவுடிசம் செய்ய உரிமையில்லை. அவர் சி.சி.டி.வி., காட்சிகளை பார்க்கவில்லை. மன நோயாளி போல் நடந்து வருகிறார். அவரை வன்மையாக கண்டிக்கிறேன். கடந்த நான்கு மாதங்களில், ஆளும் கட்சியினரைவிட முதல்வரிடம் அதிக நலத்திட்டங்களை பெற்றவர் அவர்தான். அவர் அமைச்சரை தாக்க முயன்றுள்ளார். அவர் தன்னுடைய போக்கை மாற்றி கொள்ள வேண்டும். முதல்வர், உள்துறை அமைச்சர் அங்கு இல்லை என்று தெரிந்தும் தேர்தலை மனதில் வைத்து செயல்பட்டார். தேர்தல் தோல்விபயத்தின் காரணமாக இந்த செயலை திட்டமிட்டு செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
