sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரிக்கு ராகுல் வருகையால் காங்., கட்சியினர்... உற்சாகம்: ஆளும் கட்சிக்கு எதிரான பாதயாத்திரையில் பங்கேற்கிறார்

/

புதுச்சேரிக்கு ராகுல் வருகையால் காங்., கட்சியினர்... உற்சாகம்: ஆளும் கட்சிக்கு எதிரான பாதயாத்திரையில் பங்கேற்கிறார்

புதுச்சேரிக்கு ராகுல் வருகையால் காங்., கட்சியினர்... உற்சாகம்: ஆளும் கட்சிக்கு எதிரான பாதயாத்திரையில் பங்கேற்கிறார்

புதுச்சேரிக்கு ராகுல் வருகையால் காங்., கட்சியினர்... உற்சாகம்: ஆளும் கட்சிக்கு எதிரான பாதயாத்திரையில் பங்கேற்கிறார்


ADDED : ஜன 19, 2026 04:57 AM

Google News

ADDED : ஜன 19, 2026 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் டில்லியில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

புதுச்சேரி காங்கிரசாருடன் ஆலோசனை நடத்திய நிலையில் வரும் 21ம் தேதி என்.ஆர்.காங்., - பா.ஜ., வுக்கு எதிராக தொடங்க உள்ள பாதயாத்திரையில் ராகுல் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.

மொத்தம் 12 நாட்கள் இந்த பாதயாத்திரை நடக்கிறது. அதில் ஏதாவது ஒரு நாள் பாதயாத்திரையில் பங்கேற்க புதுச்சேரிக்கு கண்டிப்பாக வருவதாக ராகுல் உறுதி அளித்தார்.

இதனால் புதுச்சேரி காங்., நிர்வாகிகள் உற்சாகமடைந்து தேர்தல் பணிகளையும், பாதயாத்திரை நடப்பதற்கான பணிகளையும் முழு வீச்சில்முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது,புதுச்சேரி அரசியல் நிலவரம் தொடர்பாக உன்னிப்பாக கேட்டறிந்த ராகுல், கடந்த சட்டசபை தேர்தல் தோல்வி தொடர்பாக சராமரியாக கேள்வி எழுப்பினார்.

அப்போது மூத்த காங்., தலைவர்கள்,தேர்தல் நேரத்தில் புதுசாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு சீட் கொடுத்து விடுகிறோம். அவர்கள் உண்மையான பாரம்பரியமான காங்., கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை. சம்பாதிக்க வேண்டும் என, கட்சிக்கு வருகின்றனர். சம்பாதித்துவிட்டு பறந்து விடுகின்றனர்.

இது போன்று கட்சி விசுவாசம் இல்லாதவர்ககளுக்கு சீட்டும் பதவியும் கொடுத்ததால் தோல்வி ஏற்பட்டது.

இந்த முறை புதுசாக வந்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சீட்டும் பதவியும் தந்துவிட வேண்டாம். அவர்கள் உண்மையில் காங்., கட்சிக்கு விசுவாசியா என்பதை தீர ஆராய்ந்து தான் தேர்தலில் சீட் ஒதுக்க வேண்டும் என, ஒட்டுமொத்தமாக காயம்பட்ட வடுக்களாக மனம் குமுறினர்.

நீங்க தான் எதிர்க்கட்சி அப்படியே பேச்சு தி.மு.க., பக்கமும் தாவியது. புதுச்சேரியில் உண்மையான எதிர்க்கட்சியாக காங்., தான் செயல்படுகிறது. தி.மு.க.,வின் செயல்பாடு கவனத்திற்கு வந்தது. காங்., அனைத்து மக்கள் பிரச்னைகளுக்கும் போராட்டம் நடத்துகிறது என்று பாராட்டும் தெரி வித்தார்.

கருணாநிதி பார்மூலா வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணி தான் தொடர வேண்டும். அதே நேரத்தில் அதிக தொகுதியாக 22தொகுதிகளில் நாம் போட்டியிட வேண்டும்.

மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி பேசும்போது, 'தமிழகத்தில் 3க்கு 2பங்கு சீட்டுகளை தி.மு.க., எடுத்து கொண்டு நிற்கும்; புதுச்சேரியில் 3க்கு 2 பங்கு சீட்டுகளை காங்., எடுத்து கொள்ளும். இது தான் எழுதப்படாத விதியாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த பார்மூலா தான் வரும் சட்டசபை தேர்தலில் பின்பற்ற வேண்டும் என்று காங்., கட்சியினர் ராகுலிடம் வலியுறுத்தினர்.

22 வேட்பாளர்கள் பட்டியல் அப்படியே புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்., வெற்றி வாய்ப்புள்ள 22 தொகுதிகள், அதில் யாரை வேட்பாளராக நிறுத்தினால் சுலபமாக வெற்றி பெறலாம் என்ற பட்டியலையும் வழங்கினர்.

புதுச்சேரி காங். நிர்வாகிகளுக்கான இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலகண்ணன், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திகேயன், துணை தலைவர் தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.






      Dinamalar
      Follow us