தெரு மின் விளக்கு அமைக்க காங்., எம்.பி., நிதி ஒதுக்கீடு
தெரு மின் விளக்கு அமைக்க காங்., எம்.பி., நிதி ஒதுக்கீடு
UPDATED : அக் 21, 2026 07:14 PM
ADDED : அக் 21, 2026 07:10 PM
வைத்திலிங்கம் படம் வைக்கவும்
புதுச்சேரி: வைத்திலிங்கம் எம்.பி., பல்வேறு தொகுதிகளில் நிலவி வரும் தெரு மின்விளக்குகள் பற்றாக்குறையை போக்க ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
புதுச்சேரி மாநில லோக்சபா எம்.பி., வைத்திலிங்கம், பல்வேறு தொகுதிகளில் தெரு மின்விளக்குகள் பற்றாக்குறை இருப்பதை அறிந்து, அதனை நிவர்த்தி செய்ய தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 75 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.
அதில், மின் துறையின் மூலம் 30 வாட்ஸ் எல்.இ.டி., தெரு மின் விளக்குகள் 3,474, 120 வாட்ஸ் எல்.இ.டி., தெரு மின்விளக்குகள் 1,800 கொள்முதல் செய்வதற்கு ஆணை பெற்று, மின்விளக்குகள் மின்துறையால் வாங்கப்பட்டுள்ளன.
தேவையின் அடிப்படையில் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு பல்வேறு தொகுதிகளுக்கு வழங்க வேண்டிய தெருமின் விளக்குகளையும் ஒதுக்கீடு செய்து கடிதம் அளித்துள்ளார்.
இதையடுத்து அந்த மின் விளக்குகள் அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, விரைவில் பொருத்தப்பட உள்ளது.
