/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை சந்திக்க தயாராகும் காங்.,
/
முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை சந்திக்க தயாராகும் காங்.,
முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை சந்திக்க தயாராகும் காங்.,
முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை சந்திக்க தயாராகும் காங்.,
ADDED : ஆக 16, 2025 11:38 PM
வரும் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை சந்திக்க புதுச்சேரி காங்., தயாராகி வருகிறது.
ஒரு காலத்தில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் காங்., ஆட்சியில் இருந்து கோலோச்சியது. அதன்பின் படிப்படியாக மாநிலக் கட்சிகளிடம் ஆட்சியை இழந்து, தற்போது இமாச்சலபிரதேசம் கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களிலும் மட்டும் காங்., ஆட்சியில் உள்ளது.
பல மாநிலங்களில் ஆட்சியை இழந்ததால் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் மூன்றாவது முறையாக பாஜ.,விடம் தோல்வியைத் தழுவி நிற்கிறது. இந்த நிலைக்கு காரணமே காங்., தான் என்றால் மிகையில்லை.
காங்., கட்சி வளர்ச்சியை மட்டுமே விரும்பும் தலைமைக்கு எப்பொழுதுமே கட்சியில் உள்ள தனி நபர்களின் வளர்ச்சியை விரும்பாது.
இதனால் ஓரம் கட்டப்பட்ட பல தலைவர்கள் காங்., எதிராக தனி கட்சியை துவக்கி காங்., வெற்றியை அதல பாதாளத்திற்கு தள்ளிவிட்டனர்.
இதற்கு உதாரணம் மகாராஷ்டிராவில் சரத்பவார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திராவின் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழகத்தில் மூப்பனார் உள்ளிட்டவர்களை கூறலாம். இந்த வரிசையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் அடங்குவர்.
2008ம் ஆண்டு காங்.,ல் இருந்த முதல்வர் ரங்கசாமியை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியதின் விளைவு இரண்டு முறை ரங்கசாமியிடம் காங்., ஆட்சியை பறிகொடுத்து நிற்கிறது. 2016ம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில் போட்டியிடாமல் இருந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முதல்வர் தேர்வு செய்யும் நேரத்தில் திடீரென எம்.எல்.ஏ.,ஜான் குமாரை ராஜினாமா செய்ய வைத்து நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி பெற்று முதல்வர் பதவியை அடைந்தார்.
அதற்கடுத்து 2021ம் ஆண்டு தேர்தலில் இரண்டு இடங்கள் மட்டுமே பிடித்து காங்., படு தோல்விவை சந்தித்தது.
தோல்விக்கான காரணத்தை கண்டறிய நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் புதுச்சேரி முக்கிய நிர்வாகிகளை ஒரே நேரத்தில் சந்தித்து பேசிய முன்னாள் காங்.,தலைவர் ராகுல், 30 தொகுதி உள்ள புதுச்சேரியில் நாம் தோல்வி அடைந்ததற்கு என்ன காரணம் என்று கேட்ட கேள்விக்கு நிர்வாகிகளிடம் இருந்து சரியான பதில் தராமல் மவுனம் காத்தனர்.
வரும் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என, ராகுல் கூறி அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் கடந்த தேர்தல் போல் செயல்படாமல் வரும் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் பட்டியலில் தற்போது முக்கிய தலைவர்களாக விளங்கும் கட்சி தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட யாரையும் முன்னிருந்தாமல் தேர்தலை சந்திப்பது. வெற்றி பெற்ற பின்பு முதல்வர் யார் என்பதை அறிவிப்பது என்ற நிலைப்பாட்டினை புதுச்சேரி காங்., எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 80 வயதுக்கு மேல் இருப்பவர்களை மாநில அரசியலில் இருந்து ஓய்வு கொடுத்து, மீண்டும் மத்தியில் காங்., ஆட்சிக்கு வந்தால் கவர்னர் போன்ற பதவிகளுக்கு பரிந்துரைப்பது போன்ற முடிவுகளை கட்சி எடுக்க வேண்டும்.
இதனால் குறைந்த வயதுடையவர்களுக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று கட்சியினர் கூறுகின்றனர். என்ன செய்யப் போகிறது காங்., தலைமை?

