/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜ்பவன் தொகுதியில் காங்., தீபாவளி தொகுப்பு வழங்கல்
/
ராஜ்பவன் தொகுதியில் காங்., தீபாவளி தொகுப்பு வழங்கல்
ராஜ்பவன் தொகுதியில் காங்., தீபாவளி தொகுப்பு வழங்கல்
ராஜ்பவன் தொகுதியில் காங்., தீபாவளி தொகுப்பு வழங்கல்
ADDED : அக் 07, 2025 01:23 AM

புதுச்சேரி, ; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராஜ்பவன் தொகுதி மக்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை காங்., மாநில செயலாளர் வழக்கறிஞர் குமரன் வழங்கினார்.
ராஜ்பவன் தொகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தீபாவளியை முன்னிட்டு அனைவருக்கு தீபாவாளி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, காங்., மாநில செயலாளர் வழக்கறிஞர் குமரன் தனது சொந்த செலவில் தீபாவளி தொகுப்பு பொருட்களை வழங்கி வருகிறார். ராஜ்பவன் தொகுதி குமரகுரு பள்ளத்தில் துவங்கிய நிகழ்ச்சியில், காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி.,முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் தீபாவளி தொகுப்பினை பொதுமக்ளுக்கு வழங்கி துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில்,முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், காங்., மாநில செயலாளர் ராஜாராம் மாவட்ட தலைவர் ராஜ்மோகன் ஜெரால்ட் மற்றும் காங்., பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்