தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ராகுல், பிரியங்கா கைதை கண்டித்து புதுச்சேரியில் காங்., போராட்டம்

ராகுல், பிரியங்கா கைதை கண்டித்து புதுச்சேரியில் காங்., போராட்டம்

ராகுல், பிரியங்கா கைதை கண்டித்து புதுச்சேரியில் காங்., போராட்டம்


UPDATED : அக் 08, 2026 10:36 PM

ADDED : அக் 08, 2026 08:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 10:36 PM ADDED : அக் 08, 2026 08:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்., கட்சியினர் நடத்திய போராட்டத்தில் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உருவப்படத்தை செருப்பால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இண்டி கூட்டணி சார்பில், தேர்தல் ஆணையரை கண்டித்து காங்., கட்சியினர் போராட்டம் நடத்த டில்லி ஜந்தர் மந்தருக்கு செல்ல முயன்றனர். அப்போது, காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதனை கண்டித்து புதுச்சேரி காங்., சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. புதுச்சேரி மிஷன் வீதி, செயின்ட் ஆன்ஷ் வீதி சந்திப்பில் இருந்து தலைமை தபால் நிலையம் நோக்கி ஆர்ப்பாட்டம் நடத்த ஊர்வலமாக புறப்பட்டனர். காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னார் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ., வைத்தியநாதன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர்.

அவர்கள் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் முகமூடி அணிந்த ஒருவர் கையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, அழைத்து வரப்பட்டார். ஊர்வலமாக வந்த காங்., கட்சியினரை போலீசார் ஆம்பூர் சாலை அருகே பேரிகார்டு அமைத்து தடுத்தனர்.

அப்போது வைத்திலிங்கம், நாராயணசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பேரிகார்டு மீது ஏறி மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். காங்., கட்சியினர் சிலர் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உருவப்படத்தை செருப்பால் அடித்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்., கட்சியினர் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us