/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'நாராயணசாமி பேச்சால் காங்.,க்கு தான் பின்னடைவு'
/
'நாராயணசாமி பேச்சால் காங்.,க்கு தான் பின்னடைவு'
ADDED : அக் 25, 2025 07:56 AM

புதுச்சேரி: முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேச்சால் காங்., கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதாக, கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
அவர், கூறியதாவது;
கடந்த 21ம் தேதி, பெய்த கனமழையில், காலாப்பட்டு தொகுதி ராஜகோபாலன் நகர், புதுநகர் ஆகிய பகுதியில், மழைநீர் வீட்டிற்குள் புகுந்தது. சின்ன காலாப்பட்டு மீனவ கிராமத்தில், படகுகள், வலைகள் சேதமடைந்துள்ளன.
வீட்டில் இருந்த டி.வி., உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்துள்ளன. 50 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை, நிவாரணம் வழங்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மழையில், 1 கோடிக்கு ரூபாய்க்கு மேல், படகுகள், வலைகள் சேதமடைந்துள்ளன.
தீபாவளி பண்டிகையில், அரசியல் தலைவர்கள் பட்டாசு, இனிப்புகள் வழங்குவது வழக்கம்.
அதன்படி, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வழங்கிய, தீபாவளி பொருட்களை, மக்களுக்கு வழங்கினேன். அதை பற்றி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தரக்குறைவாக பேசக் கூடாது. அவர், மத்திய அமைச்சராக இருந்த போது, புதுச்சேரிக்கு எந்த வளர்ச்சி திட்டத்தையும் செய்யவில்லை.
நாராயணசாமி, குறுக்கு வழியில் முதல்வராக வந்தவர். அவரது 5 ஆண்டு ஆட்சி காலத்தில், ஒரு சாலையை கூட போடவில்லை. இவரது பேச்சால் தான், காங்., பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால், காங்., கட்சிக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும்' என்றார்.

