/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
20 தொகுதிகளில் காங்., போட்டியிட வேண்டும் மேலிட பொறுப்பாளரிடம் நிர்வாகிகள் பட்டியல்
/
20 தொகுதிகளில் காங்., போட்டியிட வேண்டும் மேலிட பொறுப்பாளரிடம் நிர்வாகிகள் பட்டியல்
20 தொகுதிகளில் காங்., போட்டியிட வேண்டும் மேலிட பொறுப்பாளரிடம் நிர்வாகிகள் பட்டியல்
20 தொகுதிகளில் காங்., போட்டியிட வேண்டும் மேலிட பொறுப்பாளரிடம் நிர்வாகிகள் பட்டியல்
ADDED : அக் 26, 2025 03:14 AM

புதுச்சேரி: சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என காங்., மாநில நிர்வாகிகள் பட்டியலிட்டு மேலிட பொறுப்பாளர் கிரீஷ்யிடம் தெரிவித்தனர்.
புதுச்சேரியில் வரும் சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என காங்., கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரி - தமிழக காங்., பொறுப்பாளர் கிரீஷ் இரு நாள் பயணமாக நேற்று முன்தினம் புதுச்சேரி வந்தார். காங்., கையெழுத்து இயக்கம் சம்பந்தமாக நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார்.
இரண்டாம் நாளாக நேற்று செண்பா ஓட்டலில் தங்கி இருந்த அவரை இரண்டாம் கட்ட காங்., தலைவர்கள் சந்தித்து பேசினர். அப்போது, வரும் சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளில் கட்டாயம் காங்., போட்டியிட வேண்டும் என, வலியுறுத்தி பட்டியலை கொடுத்தனர்.
மேலும், காங்., கட்சியில் இணைய விரும்பும் முக்கிய பிரமுகர்ளை கட்சியின் தலைமை வரவேற்று சேர்க்க வேண்டும். புதிய கமிட்டியை அமைக்க வேண்டும். பீகார் தேர்தல் முடிந்தவுடன் ராகுல் காந்தியை சந்திக்க நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் சிவகுமாரை புதுச்சேரியின் தேர்தல் பொறுப்பாளராக உடனடியாக நியமிக்க வேண்டும் என, மாநில நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.
சந்திப்பின்போது, பொதுச் செயலாளர்கள் சிவசண்முகம் , மணவாளன், ரகுமான், வேல்முருகன், மாநில ஓ.பி.சி., தலைவர் கண்ணன், மாநில செயலாளர்கள் மு.ப. சரவணன், செல்வம், முத்தியால்பேட்டை மாநில செயலாளர் பி.எம்., சரவணன், வட்டாரத் தலைவர்கள் பாபு, ஜெகன் உடனிருந்தனர்.
எந்தந்த தொகுதிகள் காங்., நிர்வாகிகள் மேலிட பொறுப்பாளர் கிரீஷ்யிடம் கொடுத்த பட்டியலில் கொடுத்துள்ள பட்டியலில், காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ராஜ் பவன், காமராஜர் நகர், உருளையன்பேட்டை, நெல்லி தோப்பு, லாஸ்பேட்டை, உழவர்கரை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம், நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு, திருபுவனை, ஊசுடு, காரைக்கால் தெற்கு, நெடுங்காடு, திருநள்ளாறு, மாகி, ஏனாம் ஆகிய தொகுதிகளை கட்டாயம் பெற வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

