sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி கேபிள் புதைக்கும் பணி காங்., துணைத் தலைவர் தேவதாஸ் அதிகாரிகளுக்கு 'அட்வைஸ்'

/

 பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி கேபிள் புதைக்கும் பணி காங்., துணைத் தலைவர் தேவதாஸ் அதிகாரிகளுக்கு 'அட்வைஸ்'

 பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி கேபிள் புதைக்கும் பணி காங்., துணைத் தலைவர் தேவதாஸ் அதிகாரிகளுக்கு 'அட்வைஸ்'

 பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி கேபிள் புதைக்கும் பணி காங்., துணைத் தலைவர் தேவதாஸ் அதிகாரிகளுக்கு 'அட்வைஸ்'


ADDED : மார் 18, 2026 04:56 AM

Google News

ADDED : மார் 18, 2026 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மின்சார வழங்கலில் அடிக்கடி ஏற்படும் தடைகளை நீக்குவதற்காக, பவர் கிரீட் அமைப்பிலிருந்து லாஸ்பேட்டை வரை உயர் மின்னழுத்த கேபிள் புதைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி கிருஷ்ணா நகர் மெயின் சாலையை வழியாக செல்கிறது.

15 நாட்களுக்கு முன் கேபிள் பதிக்கும் பணிக்காக சாலை வெட்டப்பட்டபோது, ஏற்கனவே புதைக்கப்பட்டிருந்த மின் கேபிள் சேதமடைந்து, கிருஷ்ணா நகர் முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

அப்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, காங்., மாநில மூத்த துணைத் தலைவர் தேவதாஸ் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, இரவென்றும் பாராமல் அதிகாரிகளை அழைத்து வந்து, மறுநாள் அதிகாலை 3:00 மணியளவில் பிரச்னையை சரிசெய்து மின்சார விநியோகிக்கப்பட்டது.

அதன் பின், சில காலம் தடைபட்டு இருந்த அந்தப் பணியை மீண்டும் தொடர்ந்து செய்தனர். தேவதாஸ். மேலும், குறுகிய சாலையில் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி கேபிள் புதைக்கும் பணி நடைபெறுவதாக தகவல் அறிந்த அவர் மீண்டும் சம்பவ இடத்துக்கு சென்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.

அவரது வேண்டுகோளின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பவர் கிரிட் உதவி செயற்பொறியாளர் வடிவேல், பணிகளை பாதுகாப்பு முறைகளை பின்பற்றி மேற்கொண்டு, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இனிமேல் இப்பணியால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் கவனம் செலுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து, தேவதாஸ் அப்பகுதி மக்களிடம் உரையாற்றியபோது, 'இனி இந்தப் பணியால் எந்தவித சிரமமும் ஏற்படாது; குறுகிய காலத்திலேயே பணிகள் நிறைவு செய்யப்பட்டு சாலை முறையாக சீரமைக்கப்படும்' என, தெரிவித்தார்.

அப்போது தேவதாஸ் அவர்களுடன் காமராஜர் நகர் தொகுதியை சேர்ந்த காங்., நிர்வாகிகள் அனைவரும் உடன் இருந்தனர்.

தேவதாசின் இந்த துரிதமான செயல்பாடும், மக்கள் பிரச்னைகளில் காட்டும் அக்கறையும் பாராட்டத்தக்கதாகும் எனக் கூறிய கிருஷ்ணா நகர் பகுதி பொதுமக்கள், 'எங்கள் அழைப்புக்கு உடனே வந்து பிரச்னைகளை தீர்க்கும் தலைவராக தேவதாஸ் உள்ளார்' என்று பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us