/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜ்பவன் தொகுதியில் காங்., நலத்திட்ட உதவிகள்
/
ராஜ்பவன் தொகுதியில் காங்., நலத்திட்ட உதவிகள்
ADDED : மே 02, 2025 04:44 AM

புதுச்சேரி: மே தினத்தையொட்டி, ராஜ்பவன் தொகுதியில் முன்னாள் கவுன்சிலர் வக்கீல் குமரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
ராஜ்பவன் தொகுதியில், மே தினம் கொண்டாடப்பட்டது. முன்னாள் கவுன்சிலர் வக்கீல் குமரன் பயனாளிகளுக்கு, நான்கு சக்கர தள்ளு வண்டி, தையல் மிஷின், பெண்களுக்கு பூ வியாபாரம் செய்யும் தள்ளு வண்டி வழங்கினார்.
மேலும், சலவை தொழிலாளர்களுக்கு கேஸ் மூலம் இயங்கும் சலவை பெட்டி, இளைஞர்களுக்கு கிரிக்கெட், கேரம் போர்டு, பெண்களுக்கு புடவைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., தொகுதி பொறுப்பாளர்கள், முரளி, மோகனசுந்தரம், குமார், கந்தன், தமிழ்செல்வன், சித்தானந்து, குமார், சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

