தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ராஜ்பவன் தொகுதியில் காங்., மகளிர் ஆலோசனை கூட்டம் 

ராஜ்பவன் தொகுதியில் காங்., மகளிர் ஆலோசனை கூட்டம் 

ராஜ்பவன் தொகுதியில் காங்., மகளிர் ஆலோசனை கூட்டம் 


ADDED : மார் 03, 2026 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 04:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் காங்., கமிட்டி சார்பில் மூன்றாவது நாளாக குமரகுரு பள்ளம் பகுதியில் மகளிர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

மாநில செயலாளர் குமரன் தலைமை தாங்கினார். இதில், குமரகுரு பள்ளம் அரசு குடியிருப்பு, அந்தோனியார் கோயில் வீதி, மீரான் சாகிப் வீதி ஆகிய பகுதிகளை சார்ந்த 700 மகளிர்கள் கலந்து கொண்டு, தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர்.

அதற்கு, காங்., மாநில செயலாளர் குமரன், நீண்ட காலமாக திறக்கப்படாமல் உள்ள சமுதாயக்கூடத்தை திறந்து மகளிர் சுய உதவி குழுவிற்கு ஒப்படைக்கப்படும். சமுதாயக்கூடம் அருகே ஆரோ பிளான்ட் அமைத்து தரப்படும். ராஜ்பவன் தொகுதியிலேயே வருவாய் அலுவலகம், அரசு இடத்தில் கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்தார். வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டு அளித்து வெற்றி பெற செய்தால், ஓரிரு மாதங்களில் இவை அனைத்தும் செய்து தரப்படும் என்றார்.

தொடர்ந்து, புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு ரூ. 1.5 லட்சம் செலுத்த வேண்டும் என குடிசை மாற்று வாரியம் கூறியுள்ளது. எங்களால் அந்த பணத்தை கட்ட முடியாமல் பல பேர் வீடு வாங்காமல் உள்ளதாக கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து கட்சியின் தலைமையிடம் தெரிவித்து நிவர்த்தி செய்யப்படும் எனத் தெரிவிதை்தார்.

. கூட்டத்தில், பங்கேற்ற அனைத்து மகளிர்களுக்கும் பட்டுப்புடவை பரிசாக வழங்கப்பட்டது. இதில், மாநில செயலாளர் ராஜாராம், நிர்வாகிகள் முரளி, மனோகர், மோகனசுந்தரம், ஜெரால்ட் சார்லஸ், குப்பன், தமிழ்ச்செல்வன், சித்தானந்தன், மருவின், தினகர், சதீஷ், பிரசாந்த், சதீஷ்குமார் வினோலா மேரி, விஜயா, அமுதவல்லி, பரமேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us