தொகுதி மேம்பாட்டுப் பணிகள் :நேரு எம்.எல்.ஏ., ஆலோசனை
தொகுதி மேம்பாட்டுப் பணிகள் :நேரு எம்.எல்.ஏ., ஆலோசனை
UPDATED : அக் 15, 2026 03:54 PM
ADDED : அக் 15, 2026 03:44 PM
புதுச்சேரி: உளுளையன்பேட்டை தொகுதி மேம்பாட்டு பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ.,நேரு ஆலோசனை நடத்தினார்.
தொகுதி மேம்பாட்டு பணிகள் குறித்து பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., நேரு ஆலோசனை செய்தார்.
அப்போது அண்ணாசாலை, காமராஜர் சாலை,புஸ்ஸி வீதியில் அமைக்கும் பணிகள்,திருவள்ளுவர் சாலையில் 'யு' வடிவ வாய்க்காலை மாற்றி, 'எல்' வடிவ வாய்க்கால் அமைக்கும் பணிகள், மறைமலை அடிகள் சாலை வெங்கட சுப்பரெட்டியார் சிலை அருகில் புதிய சர்வீஸ் ரோடு அமைத்தல் மற்றும் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிவாசல் வீதி, அம்மன் கோயில் வீதி, தச்சர் வீதி, கண்ணார வீதி, புதுநகர் மெயின் ரோடு, கல்வேபங்களா மெயின் ரோடு, நேரு நகர் என தொகுதிக்குட்பட்ட சில பகுதிகளில் புதிய சிமென்ட் சாலை அமைத்தல் உட்பட பல்வேறு பணிகள் விரைவாக துவங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
