தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கிணறு வெட்ட பயன்படுத்திய ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

கிணறு வெட்ட பயன்படுத்திய ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

கிணறு வெட்ட பயன்படுத்திய ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்


ADDED : அக் 15, 2026 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2026 01:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மயிலம்: மயிலம் அருகே கிணறு வெட்ட, அனுமதியின்றி பயன்படுத்திய ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே அவனம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தாண்டவராயன், விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் கிணறு வெட்டும் பணியை செய்து வந்தார். பாறைகளை வெட்டி எடுக்க திண்டிவனம் அருகே உள்ள மானுார் சுப்பிரமணியன், 41 ; கள்ளக்குறிச்சி எலவரசனுார் கோட்டையை சேர்ந்த புருஷோத்தமன், 40 ; ஆகிய இருவரும் ஜெலட்டின் குச்சிகளை வழங்கி உள்ளனர்.

அதேபோன்று, மயிலம் அடுத்த வேங்கை கிராமத்தை சேர்ந்த அரிபுத்திரன் என்பவர் நிலத்தில் கிணற்றில் பாறைகளை உடைக்க ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து மயிலம் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் திருவக்கரை அடுத்த எறையூரை சேர்ந்த மாரியப்பன், 41; வெங்கட் 40; நிலத்தின் உரிமையாளர் அரிபுத்திரன் 38; மற்றும் மானுார் சுப்ரமணியன், எலவரசனுார் கோட்டை புருேஷாத்தமன் ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர். அவர்களிடமிருந்து ஜெலட்டின் குச்சிகள், ஒயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us