sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கட்டட ஒப்பந்ததாரர் மயங்கி விழுந்து பலி

கட்டட ஒப்பந்ததாரர் மயங்கி விழுந்து பலி

கட்டட ஒப்பந்ததாரர் மயங்கி விழுந்து பலி


ADDED : அக் 23, 2024 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2024 04:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட கட்டட ஒப்பந்ததாரர் மயங்கி விழுந்து இறந்தார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பேட்டையன்சத்திரம், வழுதாவூர் சாலையை சேர்ந்தவர் கணேஷ், 54; கட்டட ஒப்பந்ததாரர். இவருக்கு, கலையரசி என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர். கணேஷ் தினமும் கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு நடைபயிற்சிக்கு சென்ற கணேஷ், போலீஸ் மைதானத்தில் நடைபயற்சியின் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதைகண்ட அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த டாக்டர், கணேஷ் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி கலையரசி அளித்த புகாரின் பேரில், கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us