/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கம்பன் அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி
/
கம்பன் அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி
ADDED : டிச 08, 2025 05:23 AM

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை மூலம், நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 76 லட்சம் செல்வில் மேற்கு (205 மீட்டர்) தெற்கு(165 மீட்டர்) கிழக்கு பகுதியில் (50 மீட்டர்) நீலத்திற்கு பள்ளி சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி துணை முதல்வர் சுப்பிரமணியன், பள்ளி நுாலகர் கலியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

