/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆதிதிராவிட நலத்துறையை கண்டித்து போராட்டம் : தி.மு.க., முடிவு
/
ஆதிதிராவிட நலத்துறையை கண்டித்து போராட்டம் : தி.மு.க., முடிவு
ஆதிதிராவிட நலத்துறையை கண்டித்து போராட்டம் : தி.மு.க., முடிவு
ஆதிதிராவிட நலத்துறையை கண்டித்து போராட்டம் : தி.மு.க., முடிவு
ADDED : டிச 08, 2025 05:23 AM

புதுச்சேரி: ஆதிதிராவிடர் நலத் துறை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க., அறிவித்துள்ளது.
புதுச்சேரி தி.மு.க., ஆதிதிராவிட நலக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வில்லியனூர் அலு வலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு நலக்குழுவின் அமைப்பாளர் செல்வநாதன் தலைமை வகித்தார். தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் கதிரவன் வரவேற்றார். தொ.மு.ச., மாநில தலைவர் அங்காளன், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர்கள் அய்யனார், ஆறுமுகம், காளி, சக்திவேல், அன்பழகன், திருநாவுக்கரசு, தெய்வேந்திரன், கமலக்கண்ணன், கலியமூர்த்தி, சக்திவேல், தொகுதி துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன், கோவிந்தசாமி, அன்பழகன், தயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களுக்கு 20 ஆண்டுகளாக இலவச மனைப்பட்டா வழங்கப்படாமல் உள்ளது. எனவே, இடம் கையகப்படுத்தி மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் சிறப்புக்கூறு நிதியை தவறாக பயன்படுத்தும் அரசை கண்டித்து துறையின் எதிரே போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

