/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 08, 2025 05:24 AM

வில்லியனுார்: வில்லியனுார் பகுதி விவசாயிகளுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் வில்லியனுார் கோட்ட இணை வேளாண் இயக்குனர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் வில்லியனுார் உழவர் உதவியகம் மற்றும் பஜாஜ் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து பத்தாவது பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
உறுவையாறு சாய்பாபா கோவில் வளாகத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வில்லியனூர் கோட்ட துணை வேளாண் இயக்குனர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
வில்லியனுார் உழவர் உதவியக வேளாண் அலுவ லர் உமாராணி வரவேற்றார். பஜாஜ் இன்சூரன்ஸ் மேலாளர் சக்திவேல் மற்றும் வட்டார மேலாளர் ரஜினி ஆகியோர் பங்கேற்று பயிர் காப்பீடு செய்வதன் முக்கி யத்துவம் குறித்து பேசினர்.
இந்நிகழ்ச்சியில் வில்லியனுார் மற்றும் ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை உழவர் உதவியக உதவி வேளாண் அலுவலர் தமிழ்செல்வன் மற்றும் களப்பணியாளர்கள் செய்தனர்.

