sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 போலி மருந்து கிடங்குகளை காணோம்: போலீசார் அதிர்ச்சி

/

 போலி மருந்து கிடங்குகளை காணோம்: போலீசார் அதிர்ச்சி

 போலி மருந்து கிடங்குகளை காணோம்: போலீசார் அதிர்ச்சி

 போலி மருந்து கிடங்குகளை காணோம்: போலீசார் அதிர்ச்சி


ADDED : டிச 09, 2025 03:43 AM

Google News

ADDED : டிச 09, 2025 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: போலி மருந்து விவகாரத்தில், கோர்ட் உத்தரவுபடி நேற்று இரு கிடங்குகளை சோதனையிட சென்ற சி.பி.சி.ஐ.டி., போலீசார், கிடங்குகள் அங்கு இல்லாததால் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

புதுச்சேரியில், போலி மருந்து புழக்கம் குறித்து, மருந்து தயாரிப்பில் பிரபலமான, 'சன் பார்மா' நிறுவனம் அளித்த புகாரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

அதில், மதுரையை சேர்ந்த ராஜா, பிரபல நிறுவனங்களின் மருந்துகளை போலியாக தயாரித்து விற்றது தெரியவந்தது. இந்த வழக்கில், ராணா, மெய்யழகன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தகவலில், போலி மருந்து தயாரித்த குருமாம்பேட்டை மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் இருந்த மூன்று கிடங்குகளில் சோதனை நடந்தது.

மேலும் ஏழு இடங்களில் சோதனை நடத்த போலீசார் கோர்ட்டில் அனுமதி பெற்றனர்.

அதன்படி, திருபுவனைபாளையத்தில் மூடியிருந்த லார்சன் கம்பெனி, புதுச்சேரி செட்டி தெருவில் இயங்கி வந்த தலைமை அலுவலகம் மற்றும் இடையார்பாளையம், பூரணாங்குப்பத்தில் இருந்த இரு கிடங்குகள், ரெட்டியார்பாளையம், ஜெயா நகரில் உள்ள ராஜாவின் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர்.

இறுதியாக, உறுவையாறில், 'அமன் பார்மா' பெயரிலும், முத்திரையர்பாளையத்தில், 'மீனாட்சி பார்மா' பெயரிலும் உரிமம் பெற்ற மொத்த கிடங்குகளை சோதனையிட சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று சென்றனர்.

உறுவையாறில் கிடங்கு இருந்ததற்கான அறிகுறியே இல்லை. அங்கு, 10 அடிக்கு 10 அடி அளவு கொண்ட இரு கட்டடங்களில் ஒன்றில் பெட்டிக்கடையும், மற்றொரு கட்டடத்தில் வேறு ஒரு அலுவலகமும் இயங்கி வந்தது.

தொடர்ந்து, முத்திரையர்பாளையத்தில் உள்ள மீனாட்சி பார்மாவை சோதனையிட சென்றபோது, அங்கும் கிடங்கு ஏதும் இல்லை. ஒரு வீட்டை நான்கு பகுதியாக பிரித்து, நான்கு குடும்பங்கள் வசித்து வருவதை கண்டு போலீசார் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

மருந்து கிடங்கு என்ற பெயரில் இரு இடங்களில் உரிமம் பெற்றுள்ள நிலையில், அங்கு கிடங்குகள் இல்லாதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து, சிறப்பு புலனாய்வு குழுவினர், நேற்று தங்கள் விசாரணையை துவங்கி உள்ளனர்.

அதில், ராஜா, போலி மருந்துகளை தயாரிக்க வேதியியல் மற்றும் பார்மசிஸ்ட் பட்டதாரிகள் பலரை பணியில் அமர்த்தியிருந்ததும், அவர்களை வேனில் அழைத்து சென்று, லார்வன் கம்பெனி, குருமாம்பேட்டை, மேட்டுப்பாளையம், இடையார்பாளையம் மற்றும் பூரணாங்குப்பம் கிடங்குகளில் வைத்து போலி மருந்து தயாரித்ததும் தெரிய வந்துள்ளது.

இந்த போலி மருந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்களை பிடித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதனால், புதுச்சேரி மற்றும் சுற்று வட்டாரத்தில் தமிழகத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பட்ட தாரிகள் சிக்குவர் என, தெரிகிறது.

பட்டதாரிகளுக்கு வலை

இந்த போலி மருந்து விவகாரம் குறித்து, கவர்னர் உத்தரவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவினர், நேற்று முதல் தங்கள் விசாரணையை துவங்கியுள்ளனர். அதில், ராஜா, போலி மருந்துகளை தயாரிக்க வேதியியல் மற்றும் பார்மசிஸ்ட் பட்டதாரிகள் பலரை பணியில் அமர்த்தியிருந்ததும், அவர்களை வேனில் அழைத்து சென்று, லார்வன் கம்பெனி, குருமாம்பேட்டை, மேட்டுப்பாளையம், இடையார்பாளையம் மற்றும் பூரணாங்குப்பம் கிடங்குகளில் வைத்து போலி மருந்து தயாரித்ததும் தெரிய வந்துள்ளது. இந்த போலி மருந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்களை பிடித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதனால், புதுச்சேரி மற்றும் சுற்று வட்டாரத்தில் தமிழகத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் சிக்குவர் என, தெரிகிறது.








      Dinamalar
      Follow us