/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழைநீரை வெளியேற்ற பைப் அமைக்கும் பணி
/
மழைநீரை வெளியேற்ற பைப் அமைக்கும் பணி
ADDED : டிச 16, 2024 05:57 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் பெய்த கன மழையில், பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனை அற்றும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு மழை காலங்களில், வெங்கட்டா நகர் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனால், மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மழைநீர் தேங்காமல் இருக்க, அங்கு நிரந்தரமாக, பைப் மற்றும் நீரை உறிஞ்சும், 60 குதிரை திறன் கொண்ட மின் மோட்டார் அமைக்கும் பணி, 45 அடி சாலையில் நடந்து வருகிறது.
அந்த பகுதியில், சாலையின் குறுக்கே, நிரந்தரமாக பைப் புதைத்து, அப்பகுதியில் தேங்கும் மழைநீரை, அருகில் உள்ள பெரிய வாய்க்காலில் விடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதே, போன்று, கிருஷ்ணா நகர் அருகே, கருவடிக்குப்பம், செண்பாக ஒட்டல் அருகே பைப் மற்றும் மோட்டார் அமைக்கப்பட்டு, தேங்கி நின்ற மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது என, பொதுப்பணித்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

