/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நவ நரசிம்மர் கோவில் கட்டும் பணி துவக்கம்
/
நவ நரசிம்மர் கோவில் கட்டும் பணி துவக்கம்
ADDED : ஜன 26, 2025 04:48 AM

புதுச்சேரி : முத்தியால்பேட்டை ஹயக்ரீவ பெருமாள் கோவிலில் நவ நரசிம்மர் கோவில் கட்டும் பணியை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.
முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவ பெருமாள் கோவில் அருகே நவ நரசிம்மர் கோவில் நிர்மாணிக்கப்பட உள்ளது. ஸ்ரீ அகோபில ேஷத்திரத்தில் அருள்பாலிப்பது போன்று நவ நரசிம்மர்களுடன், தச நரசிம்மராக பானக நரசிம்மரும் ஒரே சந்நிதியில் அருள்பாலிக்கும் வண்ணம் அமைக்கப்படவுள்ள இக்கோவிலுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
காலை 8:45 மணிக்கு பகவத் அனுக்ஞை, புண்யாஹவாசனம், லஷ்மி, சுதர்சன மற்றும் வாஸ்து சாந்தி ேஹாமங்கள், காலை 10:00 மணிக்கு பூர்ணாஹூதி விமர்சையாக நடந்தது.
10:31 மணிக்கு கோவில் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன், அமைச்சர் லட்சுமிநாராயணன், பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் கோவில் கட்டுமானத்திற்கான பூமி பூஜையை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்திரன், அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வேத ஆகம சம்ரக் ஷண லட்சுமி சரஸ் மாருதி ட்ரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.