/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'கன்ஸ்ட்ரக்டிவ் - 2024' கட்டுமான அலங்கார பொருட்கள் கண்காட்சி
/
'கன்ஸ்ட்ரக்டிவ் - 2024' கட்டுமான அலங்கார பொருட்கள் கண்காட்சி
'கன்ஸ்ட்ரக்டிவ் - 2024' கட்டுமான அலங்கார பொருட்கள் கண்காட்சி
'கன்ஸ்ட்ரக்டிவ் - 2024' கட்டுமான அலங்கார பொருட்கள் கண்காட்சி
ADDED : செப் 29, 2024 06:14 AM
புதுச்சேரி : பிசினஸ் இந்தியா எக்ஸ்சிபிஷன் நிறுவனம் சார்பில், 'கன்ஸ்ட்ரக்டிவ் - 2024' கட்டுமான உள் மற்றும் வெளி அலங்கரிப்பு பொருட்களுக்கான கண்காட்சி வரும் 1ம் தேதி துவங்குகிறது.
இக்கண்காட்சி, புதுச்சேரி - கடலுார் சாலை, அந்தோணியார் மஹாலில், வரும் 1ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடக்கிறது.
இதில், கட்டட மற்றும் கட்டுமான பொருட்கள், வீடு, அலுவலகங்களுக்கு தேவையான உள் மற்றும் வெளி அலங்கரிப்பு பொருட்கள், தயாரிப்பு நிறுவனங்களின் டீலர்கள், முகவர்கள், அனைத்து விதமான கட்டுமான பொருட்கள், அலங்கார முகப்புகள், பல்வேறு டிசைன்களில் கண்ணாடி வகைகள், தானியங்கி கதவுகள், மின்சார ஒயர்கள், விளக்குகள் மற்றும் சுவிட்ச் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களின் அரங்குகள் இடம்பெறுகின்றன.
மேலும், நவீன டைல்ஸ்கள், மார்பிள்ஸ், கிரானைட்கள், பிளைவுட் மற்றும் வேலைப்பாடுகளுடன் கூடிய லேமினேஷன் மரச்சாமான்கள், அலுமினியம், பிவிசி மற்றும் மரத்தினாலான கதவுகள், ஜன்னல்கள், கிச்சன் மற்றும் குளியலறை ஷவர்கள், சோலார் வாட்டர் ஹீட்டர்கள், பர்னிச்சர்கள் தயாரிப்பு நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் என பல்வேறு அரங்குகள் இடம் பெற உள்ளன.
கண்காட்சி வரும் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை, காலை 10:30 மணிக்கு துவங்கி இரவு 8:30 மணிக்கு வரை நடக்கிறது.
இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு பிசினஸ் இந்தியா எக்ஸ்சிபிஷன் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.