நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : உழவர்கரை தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
உள்ளாட்சித்துறை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, சிவசங்கர் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். துறை இயக்குனர் சக்திவேல், துணை இயக்குனர் சவுந்தரராஜன், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், செயற்பொறியாளர் மலைவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், உழவர்கரை தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகளான மின்விளக்கு, சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். 2023-24ம் நிதியாண்டில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளை கால தாமதம் இன்றி முடிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

