நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பாகூரில் நகர மேம்பாடு மற்றும் பாரம்பரியம் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கவுரவ தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். சங்க தலைவர் கணேசன் வரவேற்றார். செயலாளர் மணிவண்ணன், சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார்.
பாகூர் நகர பகுதியில் புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இது பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக, சுகாதாரத் துறையினர் போர்க்கால அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு, தடுப்பு நடவடிக்கை மற் றும் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
துணை தலைவர் குமரன் நன்றி கூறினார்.

