/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிஜிட்டல் நில அளவை தொடர்பாக முருங்கப்பாக்கத்தில் கலந்தாய்வு
/
டிஜிட்டல் நில அளவை தொடர்பாக முருங்கப்பாக்கத்தில் கலந்தாய்வு
டிஜிட்டல் நில அளவை தொடர்பாக முருங்கப்பாக்கத்தில் கலந்தாய்வு
டிஜிட்டல் நில அளவை தொடர்பாக முருங்கப்பாக்கத்தில் கலந்தாய்வு
ADDED : ஆக 25, 2025 05:39 AM

அரியாங்குப்பம்: நில அளவை மற்றும் பதிவுத்துறை மூலம், நக் ஷா திட்டத்தின் கீழ், புதிய டிஜிட்டல் நில அளவை தொடர்பாக முருங்கப்பாக்கத்தில் விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
நில அளவை மற்றும் நில பதிவுத்துறை மூலம், நக் ஷா திட்டத்தின் கீழ் சொத்து பதிவுகளை புதிய டிஜிட்டல் முறையில், நவீன நில அளவை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தை முருங்கப்பாக்கம் வருவாய் கிராமத்தில், கடந்த பிப்., மாதம் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
இது தொடர்பாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில், கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.
எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், சம்பத் ஆகியோர் தலைமை தாங்கினர். நில அளவை மற்றும் பதிவேடுதுறை இயக்குனரக, இயக்குநர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
துறைநில மேலாளர் சந்திரசேகரன், உதவி இயக்கநர் சகாயராஜ், தாசில்தார்கள் பிரீதிவி, குப்பன், துணை தாசில்தார் விமலன் உள்ளிட்டோர் இந்த திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.
நக் ஷா திட்டம் விளக்கம் செயற்கை கோள்கள், ட்ரோன்கள் மற்றும் ரோவர்கள் ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிக துல்லியமான டிஜிட்டல் நிலப் பதிவுகளை உருவாக்குகிறது.
இது பாரம்பரிய சங்கிலி மற்றும் டேப் மூலம் அளவை முறையை மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தனித்தனியாக புல எண் வழங்குதல், மேம்படுத்தப்பட்ட புலப்படங்கள் (எப்.எம்.பி)மற்றும் நிலவரித்திட்ட பதிவேடுகள் தயாரித்தல், இதுவரை தனிப்பட்டா மாற்றம் செய்யாமல் இருப்பவர்களுக்கு அவர்களது நில உரிமை ஆவணங்களின் அடிப்படையில், உரிமை மாற்றம் செய்து, பட்டா வழங்குதல், நில எல்லை பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட நில அளவை தொடர்பாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.