/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : நவ 27, 2024 05:04 AM

புதுச்சேரி : அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து சார்பில் 51ம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நுகர்வோர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்தோஷ் குமார் தலைமை தாங்கினார்.
ஊர்வலத்தை முன்னாள் நீதிபதி மோகன் தாஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தென் பாரத அமைப்பு செயலாளர் சுந்தர்ஜி முன்னிலை வகித்தார்.
சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலத்தில் 167 பொறுப்பாளர்கள் மங்கல இசை மற்றும் சிவ வாத்தியத்துடன் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, கீர்த்தி மகாலில் நடந்த நிகழ்ச்சிக்கு, வடக்கு தமிழ்நாடு தலைவர் வெங்கட்ராமன் வரவேற்றார்.
சபாநாயகர் செல்வம், ராமலிங்கம் எம்.எல்.ஏ., மற்றும் புகழ் முருகன், தென்பாரத அமைப்புச் செயலாளர் சுந்தர்ஜி வாழ்த்தி பேசினர்.
புதுச்சேரி மற்றும் கடலுார் மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ் நோக்கவுரை ஆற்றினார்.
வட தமிழ்நாடு மாநில செயலாளர் பசுபதி தீர்மானங்களை வசித்தார். அன்பரசன் நன்றி கூறினார்.

