தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.என்.எல்., நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

 பி.என்.எல்., நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

 பி.என்.எல்., நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு


ADDED : ஜன 27, 2026 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 04:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அடமான நகைகளை திரும்ப வழங்காததால், நீதிமன்ற வழக்கு தொடர, பாண்டிச்சேரி வங்கி சாரா முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பி.என்.எல்., நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்தும், நகைகளை அடகு வைத்து பாதித்தவர்கள் இணைந்து, பாண்டிச்சேரி வங்கி சாரா முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சங்கம் துவங்கி, அரசுடன் சேர்ந்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் பணம் டெபாசிட் செய்தவர்களுக்கு 75 சதவீதம் கொடுக்க வேண்டும். நகை அடமானம் வைத்தவர்களுக்கு நிறுவனம் மூடப்பட்ட தேதி வரை நகையை அடகு வைத்து பெற்ற பணம் மற்றும் அதற்குண்டான வட்டியை தந்து நகைகளை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பானது.

அதனைத் தொடர்ந்து பணம் முதலீடு செய்தவர்களுக்கு 75 சதவீதம் கொடுத்தனர். ஆனால், அடமான நகைகளை திருப்பி தரவில்லை. இதனால், சங்க நிர்வாகிகள் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். சங்க செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், நீதிமன்ற தீர்ப்பின்படி பி.என்.எல்., நிறுவனம் அடமான நகைகளை திரும்ப வழங்காததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது, நீதிமன்ற தீர்ப்பின்படி அடமான நகைகள் விரைவில் பெற்றுத் தர வேண்டி கவர்னர் மற்றும் முதல்வரிடம் மனு அளிக்க தீர்மானிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us