தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி அரசு மோசமாக உள்ளது: காங்., வைத்திலிங்கம் குற்றச்சாட்டு

 புதுச்சேரி அரசு மோசமாக உள்ளது: காங்., வைத்திலிங்கம் குற்றச்சாட்டு

 புதுச்சேரி அரசு மோசமாக உள்ளது: காங்., வைத்திலிங்கம் குற்றச்சாட்டு


ADDED : ஜன 27, 2026 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 04:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அடிப்படை வசதிகளை உருவாக்காத மோசமான அரசாக உள்ளது என, காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திரா நகரில் காங்., சார்பில் நேற்று நடந்த நடைபயணத்தில், காங்., தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முத்த தலைவர் தேவதாஸ், ஓ.பி.சி., மாநில தலைவர் கண்ணன், மாநில வார் ரூம் ஒருங்கிணைப்பாளர் பிரபுராஜ், இளைஞர் அணித் தலைவர் ஆனந்த்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.

மாநில தலைவர் வைத்திலிங்கம் கூறியதாவது:

இது மக்களுக்கான நடைபயணம். 10வது தொகுதியாக இந்திரா நகர் தொகுதிக்கு வந்து இருக்கிறோம். நடை பயணத்தில் மக்களின் எழுச்சியையும், வரவேற்பையும் பார்க்க முடிகிறது. அவர்கள் புதுச்சேரியில் ஆளும் ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

மக்கள் வேலை வாய்ப்பை தான் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர்களுக்கு எந்த உத்திரவாதமும் செய்யவில்லை. புதிய தொழிற்சாலைகள் வரவில்லை. இந்த ஆட்சியில் 10 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றுள்ளனர். காலி பணியிடங்கள் அதிகரித்துள்ளன.

தற்போது அனைத்து து றைகளில் இருந்தும் காலி பணியிடங்கள் குறித்து விவரங்களை கேட்டுள்ளனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது போன்று கேட்பது மக்கள் மத்தியில் மாயையை உருவாக்கும் வேலை. அடிப்படை வசதிகளை உருவாக்காத மோசமான அரசாக உள்ளது. இலவசங்களை கொடுத்தால் நாம் ஜெயித்து விடலாம் என, நினைக்கின்றனர்.

சார்லஸ் மார்ட்டின் லாட்டரி சீட்டை விற்க, கேசினோவை கொண்டு வர இருக்கிறார் என, அனைவருக்கும் தெரியும். இது புதுச்சேரி மக்களிடம் எடுபடாது' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us