ADDED : ஜன 27, 2026 04:27 AM

புதுச்சேரி: 38வது சாலை பாதுகாப்பு மாதம் 2026ன் ஒரு பகுதியாக, கைக்குட்டை மற்றும் கூழாங்கல் ஓவியப் போட்டி நேற்று ராஷ்ட்ரிய ரக் ஷா பல்கலைக்கழகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியை போக்குவரத்துத்துறை மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து நடத்தியது. போக்குவரத்து அலுவலர் பிரபாகர ராவ் போட்டியை துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணி திட்ட மாநில அலுவலர் சதீஷ், சாலை பாதுகாப்பு ஆய்வாளர் அஷ்வின்ராம், உதவி மோட்டார் வாகன ஆய்வாளர் சந்தோஷ், ஒருங்கிணைப்பாளர் சதீஷ் மற்றும் போக்குவரத்துத் துறையின் அமலாக்க உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்ட 100 பேர் சாலை பாதுகாப்பு கருப்பொருளில் நடந்த ஓவியப் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டியாளர்கள் கைக்குட்டை, கூழாங்கற்களில் வரைந்து ஓவியத் திறமைகளை வெளிப் படுத்தினர்.
போட்டியின் நடுவர்களாக மாதிவாணன் மற்றும் தேவராஜ் ஆகியோர் செயல்பட்டனர்.
