/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒப்பந்த ஆசிரியர்கள் தபால் அனுப்பும் போராட்டம்
/
ஒப்பந்த ஆசிரியர்கள் தபால் அனுப்பும் போராட்டம்
ADDED : பிப் 13, 2026 05:57 AM

புதுச்சேரி: ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி, பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் 292 ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி, கடந்த 21ம் தேதி முதல் கல்வித்துறை வளாகத்தில் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி தலைமை தபால் நியைலம் அருகில் பிரதமர் மோடிக்கு தபால் அனுப்பும் போராட்டம், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவ தலைவர் சேஷாசலம் தலைமையில் நடந்தது.
அரசு ஊழியர் சங்கங்க ளின் தலைவர் பாலகுமார், தலைமை ஆசிரியர் சங்கத் தலைவர் சிரில் நிக்கோலஸ், துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத் தலைவர் பொறிசெழியன், விரிவுரை யாளர் சங்க தலைவர் அருள்சாமி, பட்டதாரி ஆசிரியர் சங்கங்களின் தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

