/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டம்
/
பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டம்
ADDED : ஜன 22, 2026 05:45 AM

புதுச்சேரி: ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி நேற்று கல்வித்துறை வளாகம் எதிரே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பள்ளி கல்வித்துறையில் கவுரவ விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பால சேவிக்கா உள்ளிட்ட 292 ஆசிரியர்கள் கடந்த 6 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் 4 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர் ரங்கசாமி, அமைச்சரவையை கூட்டி பணி நிரந்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தார்.
ஆனால், பணி நிரந்தரம் செய்ய அரசு எந்தவித நடவடிக்கை எடுக்காததால், கடந்த டிசம்பர் 24ம் தேதி மீண்டும் கல்வித்துறை வளாகம் எதிரே ஒப்பந்த ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அப்போது, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், சங்க பிரதிநிதிகளைஅழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், அனைவரும் பொங்கலுக்குள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என, உத்தரவாதம் அளித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும், இதுவரையில் பணி நிரந்தரம் செய்வதற்கான எந்த ஆயத்தப் பணிகளை அரசு மேற்கொள்ளவில்லை.
இதனை கண்டித்தும், பணி நிரந்தரம் செய்யக் கோரியும் ஒப்பந்த ஆசிரியர்கள் நேற்று மீண்டும் கல்வித்துறை வளாகம் எதிரே தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவங்கியுள்ளனர். இதில், புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவ தலைவர் சேஷாச்சலம் பங்கேற்று வாழ்த்தி பேசினார்.

