ADDED : ஜன 22, 2026 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்த்தாய் நகர் இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில், 6ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா நடந்தது.
இதில், பொதுமக்களுக்கு கோலப் போட்டி, ஓட்டப் பந்தயம், உரி அடித்தல், கயிறு இழுத்தல் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பரிசுகளை வழங்கி, வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில்தி.மு.க., கிளை செயலாளர் காந்தி, ஊர் பஞ்சாயத்தார்கள் அனந்த், அருள், ராஜாராம், கருணாகரன், வடிவேல், இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தமிழ்தாய் நகர் பகுதி மக்கள் செய்திருந்தனர்.

