/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில பெத்தாங் போட்டி டி.பி.எஸ்.சி., அணி வெற்றி
/
மாநில பெத்தாங் போட்டி டி.பி.எஸ்.சி., அணி வெற்றி
ADDED : ஜன 22, 2026 05:30 AM

புதுச்சேரி: கோரிமேடு, போலீஸ் பயிற்சி மைதானத்தில், ஏ.வி.எஸ்., கோரிமேடு பிரதர்ஸ் பெத்தாங் கிளப் சார்பில் மாநில அளவிலான பெத்தாங் போட்டியை அரசு கொறடா ஆறுமுகம் கடந்த 17ம் தேதி துவக்கி வைத்தார்.
நியூ பெத்தாங் அசோசியேஷனில் இணைந்துள்ள 45 கிளப்புகளுக்குஇடையேயான மாநில அளவிலான 2 பேர் விளையாடும் பெத்தாங் போட்டிகள் 17, 18ம் தேதிகளில் நடந்தது.
இதில் 45 கிளப்புகளை சேர்ந்த 361 அணிகளாக 722 பேர் பங்கேற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஏ.வி.எஸ்.கோரிமேடு பிரதர்ஸ் கிளப் அணியினர் செய்திருந்தனர். இறுதி போட்டிக்கு, அரியாங்குப்பத்தை சேர்ந்த டி.பி.எஸ்.சி., அணியும், குருசுகுப்பத்தை சேர்ந்த மெட்ரோ அணியும் மோதின. இதில் அரியாங்குப்பத்தை சேர்ந்த சீனிவாசன், பாஸ் ஆகியோர் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர். குருசுகுப்பத்தை சேர்ந்த கார்த்திக், பிரான்சிஸ் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர்.

