தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஒப்பந்த ஆசிரியர்கள் 7வது நாளாக போராட்டம் நிரந்தர ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆதரவு  

 ஒப்பந்த ஆசிரியர்கள் 7வது நாளாக போராட்டம் நிரந்தர ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆதரவு  

 ஒப்பந்த ஆசிரியர்கள் 7வது நாளாக போராட்டம் நிரந்தர ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆதரவு  


ADDED : ஜன 28, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 05:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஒப்பந்த ஆசிரியர்கள் 7வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு நிரந்தர ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றி ஆதரவு தெரிவித்தனர்.

புதுச்சேரி பள்ளி கல்வித் துறையில் கவுரவ விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பால சேவிக்கா உள்ளிட்ட 292 ஆசிரியர்கள் கடந்த 6 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதில் கடந்த 21ம் தேதி கல்வித்துறை வளாகம் எதிரே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 7வது நாளாக குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போராட்டம் நடத்தும் ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரசு பள்ளிகளில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்தனர்.

போராட்டத்திற்கு இளைஞர் காங்., தேசிய பொறுப்பாளர் மணீஷ் சர்மா, புதுச்சேரி இளைஞர் காங்., மாநில தலைவர் ஆனந்தபாபு மற்றும் நிர்வாகிகள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us