/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒப்பந்த ஆசிரியர்கள் 3ம் நாளாக போராட்டம்
/
ஒப்பந்த ஆசிரியர்கள் 3ம் நாளாக போராட்டம்
ADDED : ஜன 24, 2026 06:14 AM

புதுச்சேரி: ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி, நேற்று 3வது நாளாக கல்வித்துறை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பள்ளி கல்வித்துறையில் கவுரவ விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பால சேவிக்கா உள்ளிட்ட 292 ஆசிரியர்கள் கடந்த 6 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் பகுதியாக, பணி நிரந்தரம் செய்யகோரியும் ஒப்பந்த ஆசிரியர்கள் நேற்று 3வது நாளாக கல்வித்துறை வளாகம் எதிரே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, முன்னாள் எம்.எல்.ஏ., சுவாமிநாதன் தலைமையில் த.வெ.க., நிர்வாகிகள் ஒப்பந்த ஆசிரியர்களுடன் அமர்ந்து குறைகளை கேட்டறிந்தனர்.
பனி மற்றும் மழை யிலும் இரவு முழுவதும் போராட்டம் தொடர்ந்தது.

