தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஒப்பந்த ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு

 ஒப்பந்த ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு

 ஒப்பந்த ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு


ADDED : பிப் 25, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் 292 ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி, கடந்த 21ம் தேதி முதல் கல்வித்துறை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை நேற்று முன்தினம் அழைத்துபேச்சு வார்த்தை நடத்தினார். அதில், ஒப்பந்த ஆசிரியர்களுக்கான பணி காலம் ஓராண்டிற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் மற்றும் பாலசேவிக்காக்கள் பதவிகளுக்கான நேரடி நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். விரைவில் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

அதனை ஏற்று 34 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த ஆசிரியர்கள், தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைப்பாக தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us