sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஒப்பந்த ஆசிரியர்களின் பணிக்காலம் ஓராண்டு நீட்டிப்பு: முதல்வர் தகவல்

/

 ஒப்பந்த ஆசிரியர்களின் பணிக்காலம் ஓராண்டு நீட்டிப்பு: முதல்வர் தகவல்

 ஒப்பந்த ஆசிரியர்களின் பணிக்காலம் ஓராண்டு நீட்டிப்பு: முதல்வர் தகவல்

 ஒப்பந்த ஆசிரியர்களின் பணிக்காலம் ஓராண்டு நீட்டிப்பு: முதல்வர் தகவல்


ADDED : பிப் 13, 2026 05:52 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஒப்பந்த ஆசிரியர்கள் பணிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

சட்டசபையில் நாஜிம் எல்.எல்.ஏ.,(தி.மு.க.,) பேசியதாவது:

புதுச்சேரியே போராட்டகளமாக மாறியுள்ளது. இதுக்கு யார் காரணம். எல்லா அதிகாரிகளுக்கும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்களின் பங்களிப்புடன் சம்பளம் அளிக்கப்படுகின்றது. ஆனால், மக்கள் பிரதிநிதிகளின் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை.

கடந்த ஒரு மாதமாக பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு அரசு, அமைச்சர் காரணம் இல்லை. அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. சம்பள உயர்வும் கூட அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் எதையும் முடிவு செய்கின்றனர். பாலசேவிகா, விரிவுரையாளர்களுக்கு இதே நிலைமை தான்..

கேட்டால் கொல்லைப்புற நியமனம் என்கின்றனர். முறையாக இட ஒதுக்கீடு, அரசின் ஆட்சேர்ப்பு விதிமுறைகளை பின்பற்றி சேர்க்கப்பட்டவர்கள் எப்படி கொல்லைப்புற நியமனத்தில் கீழ் கொண்டு வரப்பட்டனர். இவர்களிடம் படித்த மாணவர்கள் ரெகுலர் வேலைக்கு செல்கின்றனர்.

ஆனால், அவர்கள் இன்னும் வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டுள்ளனர். இந்த வேலையை அரசு கொடுத்தது என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் குடும்பம் நம்பி இருக்கின்றது. அவர்களை நீக்கினால் என்னவாகும் என்று பார்க்க வேண்டும்.

இதற்கு பதிலளித்தமுதல்வர் ரங்கசாமி, 'ஒப்பந்த ஆசிரியர்கள் பணி ஓராண்டு நீட்டிப்பு செய்யப்படும். அதன் பிறகு அவர்களை பணி நிரந்தரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us