/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஆக 21, 2024 04:41 AM
புதுச்சேரி, : ராஜிவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள், வருடாந்திர ஊதிய உயர்வை வழங்க கோரி 2 வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
புதுச்சேரி, எல்லப்பிள்ளைச்சாவடியில் ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை கடந்த 2011ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
இதில், 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கு மாதம் ரூ. 13 ஆயிரம் சம்பளம்வழங்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு நடப்பு ஆண்டில் வழங்கவில்லை.
ஊதிய உயர்வு மற்றும் முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க கோரி நேற்று 2வது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் நோயாளிகள் பாதிக்காத வகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.