/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கழிவறை திட்டத்தில் ரூ.79 லட்சம் மோசடி கான்ட்ராக்டர் அதிரடி கைது
/
கழிவறை திட்டத்தில் ரூ.79 லட்சம் மோசடி கான்ட்ராக்டர் அதிரடி கைது
கழிவறை திட்டத்தில் ரூ.79 லட்சம் மோசடி கான்ட்ராக்டர் அதிரடி கைது
கழிவறை திட்டத்தில் ரூ.79 லட்சம் மோசடி கான்ட்ராக்டர் அதிரடி கைது
ADDED : அக் 24, 2025 03:03 AM
புதுச்சேரி: காரைக்காலில், மத்திய அரசின் தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தில் ரூ.79 லட்சம் மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த கான்ட்ராக்டரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
காரைக்காலில் மத்திய அரசின் தனிநபர் கழிவறை திட்டம், வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் ஆய்வு செய்ததில், கழிவறை கட்டாமலே ரூ.78.80 லட்சம் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தற்போதைய இணை வட்டார வளர்ச்சி அதிகாரி ரங்கநாதன் புகாரின் பேரில், முன்னாள் வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேமா மற்றும் 12 கான்ட்ராக்டர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து, கான்ட்ராக்டர்கள் கருணாகரன், கர்ணன் ஆகியோரை கைது செய்தனர்.
பிரேமா மற்றும் 10 கான்ட்ராக்டர்களை சீனியர் எஸ்.பி., இஷாசிங், எஸ்.பி., நல்லாம் கிருஷ்ணராயபாபு ஆகியோர் வழிகாட்டுதலுடன், இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் போலீசார் தேடி வந்தனர்.
இதனிடையே திருநள்ளாரில் பதுங்கியிருந்த கான்ட்ராக்டர் அத்திபடுகையை சேர்ந்த வீரப்பன்,38; என்பவரை நேற்று கைது செய்து, காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக உள்ள முன்னாள் வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேமா மற்றும் 7 கான்ட்ராக்டர்களை தேடி வருகின்றனர்.

