தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரியூர் வெங்கடேஸ்வரா மருந்தியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

அரியூர் வெங்கடேஸ்வரா மருந்தியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

அரியூர் வெங்கடேஸ்வரா மருந்தியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா


ADDED : ஆக 21, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: அரியூர் வெங்கடேஷ்வரா கல்விக் குழுமம் மருந்தியல் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.

விழாவிற்கு கல்லுாரி சேர்மன் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கல்விக் குழுமத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி வித்யா முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் ஜெயராமன் வரவேற்று, கல்லுாரியின் ஆண்டறிக்கையை வாசித்தார்.

சிறப்பு விருந்தினராக புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநர் செவ்வேள் பங்கேற்று, மருந்தியல் கல்லுாரி மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கி பேசுகையில், ‘மருந்தியல் துறையில் இன்று ஏராளமான தொழில், ஆராய்ச்சி மற்றும் மேற்படிப்பு வாய்ப்புகள் உள்ளது. மருந்து உற்பத்தி, தரக் கட்டுப்பாடு, தர உறுதி, மருத்துவ ஆராய்ச்சி, மருந்து கண்டுபிடிப்பு, மருத்துவமனை மருந்தகம் மற்றும் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்கள் தங்களது திறமைகளுக்கு ஏற்ப சிறந்த வாய்ப்புகளை பெற முடியும். மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களையும், ஆராய்ச்சித் திறன்களையும் வளர்த்துக்கொண்டு, மருந்தியல் துறையின் வளர்ச்சியில் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும்’ என்றார்.

வெங்கடேஷ்வரா மருந்தியல் கல்லுாரி இணைப் பேராசிரியர் பிரியங்கா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us