ADDED : ஆக 21, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் சொகுசு பஸ் மோதி வாலிபர் இறந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
காரைக்கால், புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகபர் சாதிக் மகன் முகமது கைப், 24. இவரது நண்பர் மீராபள்ளி தோட்டம் பகுதியை சேர்ந்த அஜ்மல், 21. இருவரும் நேற்று அதிகாலை முகமது கைப் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். திருநள்ளாறு சாலையிலிருந்து பாரதியார் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக அதிவேகமாக வந்த சொகுசு பஸ் பைக் மீது மோதியது. படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில், முகமது கைப் சிகிச்சை பலனின்றி இறந்தார். அஜ்மல் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பாக சொகுசு பஸ் டிரைவர் அய்யப்பன், 46, மீது காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
