/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூச் பெஹார் கோப்பை இறுதி போட்டி துவக்கம்
/
கூச் பெஹார் கோப்பை இறுதி போட்டி துவக்கம்
ADDED : டிச 15, 2024 06:14 AM

புதுச்சேரி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் கூச் பெஹார் கோப்பைக்கான இறுதி போட்டி புதுச்சேரி, திரிபுரா அணிகளுக்கு இடையே நேற்று துவங்கியது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய 19 வயதிற்கு உட்பட்ட ஆடவருக்கான கூச் பெஹார் கோப்பைக்கான லீக் போட்டிகள் முடிந்தன.
அதில், முதலிடம் பிடித்த புதுச்சேரி அணிக்கும், இரண்டாம் இடம் பிடித்த திரிபுரா அணிக்கும் இடையேயான இறுதி போட்டி புதுச்சேரி கேப் மைதானம் 2ல் நேற்று துவங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்று புதுச்சேரி அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 238 ரன்கள் எடுத்திருந்தது. புதுச்சேரி அணியின் ராகவன் 135 ரன்களும், பிரதீஷ் ராம் 72 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று (15ம் தேதி) காலை 9:30 மணிக்கு இரண்டாம் நாள் ஆட்டம் துவங்க உள்ளது.
இப்போட்டியை காண இந்திய அணியின் தேர்வாளர்கள், என்.சி.ஏ., நிர்வாகிகள் வர உள்ளனர். மேலும், கடுமையான மழை காலத்திலும் போட்டி நடைபெறுவதற்கு ஏற்ப மைதானத்தை தயார் நிலையில் வைத்திருந்த கேப் (CAP) நிர்வாகத்தை பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் பாராட்டினர்.