கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய டிரான்ஸ்பார்மரில் காப்பர் திருட்டு
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய டிரான்ஸ்பார்மரில் காப்பர் திருட்டு
ADDED : ஆக 15, 2026 07:31 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டை கழிவுநீர் சுத்துகரிப்பு நிலைய டிரான்ஸ்பார்மரில் ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான காப்பர் கம்பிகளைத் திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனி அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. அந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் மின் பாதையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் மின்துறை மூலம் கியூபிகல் மீட்டர் பொருத்தப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் மின்பாதையில் திடீர் மின்தடை ஏற்பட்டது. தகவலறிந்த அசோக் நகர் மின் இயக்குதல் மற்றும் பராமரிப்பு பிரிவு இளநிலைப் பொறியாளர் பவித்திரன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் பொருத்தப்பட்டிருந்த கியூபிகல் மீட்டர் உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான காப்பர் கம்பிகள் மர்மநபர்களால் திருட்டிருந்தது.
இது குறித்து பவித்திரன் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
