/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செந்தில்குமார் எம்.எல்.ஏ.,விற்கு கோரமண்டல் விருது
/
செந்தில்குமார் எம்.எல்.ஏ.,விற்கு கோரமண்டல் விருது
ADDED : அக் 01, 2025 07:29 AM

புதுச்சேரி :சென்னை தனியார் ஓட்டலில், ரவுண்ட் டேபிள் இந்தியா ஏரியா 2 சார்பில், 2ம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், செந்தில்குமார் எம்.எல்.ஏ.,விற்கு கோரமண்டல் விருதினை, ஏரியா 2 தலைவர் குணால் சவுத்ரி வழங்கினார்.
இந்த விருது, சமூக சேவையில் அசைக்க முடியாத தலைமைத்துவம், தன்னலமற்ற சேவையை பாராட்டி வழங்கப்பட்டது.
குறிப்பாக, அவர் கொரானா காலத்தில் மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தியது, ஆண்டுக்கு 250 பேருக்கு, இலவச கண்புரை அறுவை சிகிச்சை, கண் கண்ணாடி ஏற்பாடு செய்து கொடுத்தது.
மாணவர்களுக்கு ஸ்மார்ட் போர்டு, கணினி கள், விளையாட்டு மைதா னம், கழிவறைகள் போன்ற பணிகளை செய்து உள்ளார். மேலும், தனிப்பட்ட முறையில் பெஞ்சல் புயலின் போது நிதியுதவி செய்து, பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து, சேவையை வெளிப்படுத்தியதற்காக இவ்விருது வழங்கப்பட்டது.
நிகழச்சியில், நிர்வாகிகள் யுவராஜ், ஆனந்தராஜ், மோதிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.