/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதிதாசன் கல்லுாரியில் பெருநிறுவன துவக்க விழா
/
பாரதிதாசன் கல்லுாரியில் பெருநிறுவன துவக்க விழா
ADDED : ஏப் 18, 2025 04:16 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி தொழில் முனைவோர் அமைப்பு, கல்லுாரி தர உறுதியளிப்பு குழு இணைந்து பெருநிறுவன துவக்க விழா கல்லுாரிக வளாகத்தில் நடந்தது.
கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கி, விழாவினை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், கல்லுாரி மாணவிகள் கலந்து கொண்டு, 100க்கும் மேற்பட்ட கடைகள் வைத்து, அவற்றில் உணவுப் பொருட்கள், கைவினை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தனர். இதனை கல்லுாரி மாணவிகள் மலிவான விலையில் வாங்கிச் சென்றனர்.
ஏற்பாடுகளை தொழில் முனைவோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், விஜயலட்சுமி, சந்திரா, சுவர்ணலதா, பிரதீப்குமார்சிங், அமுதா, செல்லதுரைச்சி, முத்து, ேஷாபனா, பினோத் பிகாரி சத்பதி ஆகியோர் செய்திருந்தனர்.

