/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் ஊழல்கள் வெளி கொண்டுவரப்படுகிறது; என்.ஆர்.காங்.,செய்தி தொடர்பாளர் அறிக்கை

ADDED : நவ 23, 2024 06:21 AM
புதுச்சேரி : முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் தான் ஊழல்கள் வெளி கொண்டுவரப்பட்டு வருகிறது என என்.ஆர்.காங்., தெரிவித்தள்ளது.
அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கை;
முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக பொத்தம் பொதுவாக கூறியுள்ளார். முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் தான் காமாட்சியம்மன் கோவில் நில மோசடி வழக்கு விசாரணையில், 2 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நில விவகாரம், கடந்த 2019ம் ஆண்டு காங்., ஆட்சியில் கெயில் நிறுவனத்திற்கு சதுர அடி ரூ. 400க்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கியது.
தக்கலுார் திருவலோக சுவாமி கோவில் நிலம் கடந்த 2008 ம் ஆண்டு காங்., ஆட்சியில் ஏற்பட்ட முயற்சியின் தொடர்ச்சி. முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், அந்நிலம் கோவிலுக்கு சொந்தமானது இல்லை என கூறியுள்ளார். இதனை நாராயணசாமி விளக்க வேண்டும்.
ஆனாலும் இவை அனைத்திற்கும் முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் தான் இடையூறு இன்றி விசாரிக்கப்பட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்துவ கல்லுாரியில் என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் நடக்கிற போலி ஆவண மோடி வெளிச்சத்திற்கு வந்தது.
இது போன்ற அதிரடி நடவடிக்கையால் முதல்வர் ரங்கசாமியின் ஆட்சி ஊழலற்ற ஆட்சி என்பதை விட ஊழலை வெளிக் கொண்டு வந்து தக்க தண்டனை பெற்று தரும் ஆட்சியாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.